2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

புத்தளத்தில் 15 பவுண் நகை திருட்டு தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 11 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                (ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
புத்தளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தில்லையடி அல்காசிமி சிட்டிக்கிராம வீடொன்றில் இன்று வியாழக்கிழமை அதிகாலை சுமார் 15 பவு ணுக்கும் அதிகம் பெறுமதியுடைய தங்க நகைகள் மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக அவ்வீட்டின் உரிமையாளர் புத்தளம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த வீட்டின் குளியலறை யன்னல் ஊடாக வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு மயக்க மருந்தை தெளித்து விட்டு சுமார் 15 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகள் மற்றும் பணம் என்பனவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

வீட்டின் உரிமையாளர் மயக்கம் தெளிந்து எழும்பிய போது தமது வீட்டில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறித்து அறிந்துக்கொண்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .