2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பழுகாமம், கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்ளுக்கு 16 ஆம் திகதி வரை விளக்கமறியல்

Kogilavani   / 2012 ஒக்டோபர் 06 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜதுசன்)

மட்டக்களப்பு, பழுகாமத்தில் கடந்த 2 ஆம் திகதி இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன்  தொடர்புடையவர்களென கருதப்படும் 6 சந்தேக நபர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியறில் வைக்குமாறு களுவாஞ்சிகுடி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2 ஆம் திகதி இரவு, பழுகாமம் வன்னிநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் சுமார் 6 இலட்சம் பெறுமதியான 12 பவுன் தங்க நகைககள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களென கருதப்படும் 6 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்து குறித்த நகைகளையும் மீட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு தெரிவித்தார்.

இதன்போது தங்க சங்கிலிகள் இரண்டு, தங்க காப்புகள் இரண்டு , உருக்கிய நிலையிலான தங்கக்கட்டி ஒன்று என்பன மீட்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்படி நபர்கள் களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டபோது அடையாள அணிவகுப்புக்காக எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்மாறு நீதிவான் கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.

சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, பிரதிப்பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்கார, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜந்த சமரக்கோன், களுவாஞ்சிகுடி பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சர் பிரியந்த லியனகே ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு தலைமையிலான பொலிஸ் குழவினர் இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .