2025 ஜூலை 23, புதன்கிழமை

தங்கச் சங்கிலியை கொள்ளையடித்து விழுங்கிய நபர் கைது

Super User   / 2012 மே 16 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                           (லக்மால் சூரியகொட)

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் தங்கச் சங்கிலியொன்றை கொள்ளையடித்து அதை விழுங்கியதாக கூறப்படும் நபர் ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்தனர்.

மேற்படி தங்கச் சங்கிலி அந்நபரின் வயிற்றுக்குள் இருப்பதை எக்ஸ் றே பரிசோதனை மூலம் பொலிஸார் உறுதிப்படுத்தினர். அதையடுத்து மேற்படி சந்தேக நபரை மே 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவானின் உத்தரவிட்டார்.

அத்துடன் மேற்படி தங்கச் சங்கிலி உடலிலிருந்து வெளியே எடுக்கப்படும்வரை சந்தேக நபரை சிறைச்சாலை காவலர்களின் கண்காணிப்புடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்திருக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தான் ரயிலில் ஏறும்போது 55,000 ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை இந்நபர் கொள்ளையடித்ததாக கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் பெண்ணொருவர் முறைப்பாடு செய்திருந்தார்.

மேற்படி சந்தேக நபருக்கு எதிராக இதுபோன்று  இருபதுக்கும் அதிகமான வழக்குகள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .