2025 ஜூலை 23, புதன்கிழமை

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் கைது

A.P.Mathan   / 2012 மே 16 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கடந்த சில தினங்களாக இடம்பெற்று வந்த கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரை காத்தான்குடி பொலிஸார் இன்று புதன்கிழமை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கடந்த சில தினங்களாக இடம்பெற்று வந்த பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை செய்துவரும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் எஸ்.அமரசிறி தலைமையிலான பொலிஸ் புலனாய்வு அதிகாரி எம்.தாஹா, மற்றும் கிருபா ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழவினரே இவ்விருவரையும் கைது செய்துள்ளதுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து தங்க நகை மற்றும் சில பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இவ்விரண்டு சந்தேக நபர்களும் ஆரையம்பதி பிரதேசத்தின் தாழங்குடாவைச் சேர்ந்தவர்களாவர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் இடம் பெற்றுவருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

காத்தான்குடியில் இடம்பெற்றுவரும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னரும் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .