2025 ஜூலை 23, புதன்கிழமை

சிலாபம் வைத்தியசாலையில் பெண் வைத்தியர் மர்ம மரணம்

Menaka Mookandi   / 2012 மே 17 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாபம் மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் பெண் வைத்தியர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறையைச் சேர்ந்த நிர்ஜா பிரணவன் (வயது 28) என்ற வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த போதே இவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

தினமும் உபயோகப்படுத்தி வரும் ஊசி மருந்து விஷமாகியே இவர் உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிப்பதாக கூறிய பொலிஸ் பேச்சாளர், நீர்கொழும்பு பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .