2025 ஜூலை 23, புதன்கிழமை

யாழில் இனந்தெரியாதோரின் தாக்குதலில் இராணுவ வீரர் காயம்

Menaka Mookandi   / 2012 மே 17 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

விடுமுறைக்காக வீடு செல்லத் தயாராக இருந்த இராணுவ வீரர் ஒருவர் இனம் தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கே.கே.எஸ் வீதியிலுள்ள இரவு தேனீர்கடை ஒன்றில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் கொத்துரொட்டி வாங்கிக்கொண்டு தம்புள்ள நோக்கிப் பயணிக்கும் பஸ்ஸிற்காக காத்திருந்தவேளை இவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இச்சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் மேலதிக விசாராணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .