2025 ஜூலை 23, புதன்கிழமை

கட்டுகஸ்தோட்டையில் வீடொன்றிற்கு தீ வைப்பு

Kogilavani   / 2012 மே 18 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.எம்.ரிக்பாத்)
கண்டி - கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரணவன பகுதியிலுள்ள வீடொன்றின் மீது நேற்றிரவு தீ வைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி வீட்டில் உள்ள நபர் மதுபோதையில் தனது மனைவி மற்றும் மனையின் தந்தை ஆகியோர் மீது தாக்குதல் நடத்திவிட்டு மேற்படி வீட்டிற்கும் தீ வைத்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

வீட்டின் சேதவிபரங்கள் இதுவரை மதிப்பீடு செய்யப்படவில்லை என்றும், சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இத் தீவிபத்தில் உயிர்சேதங்கள் ஏதும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .