2025 ஜூலை 23, புதன்கிழமை

யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் செயலாளர் மீது தாக்குதல்

Kogilavani   / 2012 மே 18 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)


யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் செயலாளர்  இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

4 ஆம் வருட பொருளியில் பீட மாணவரான எஸ்.தர்ஷாந்தன் என்ற மாணவரே  இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

மேற்படி மாணவர் தமது வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்த நிலையில்,  கொக்குவில் கலட்டிச் சந்திக்கருகில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களினால் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .