2025 ஜூலை 23, புதன்கிழமை

பன்வில பாடசாலையொன்றில் திருட்டு

Suganthini Ratnam   / 2012 மே 18 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சீ.எம்.ரிஃபாத்)

பன்வில பெத்தேகம பாடசாலையொன்றின்  இசைக்கருவி களஞ்சிய அறை இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டு அங்குள்ள பெறுமதியான ஒருதொகை இசைக்கருவிகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பன்வில பொலிஸில் அப்பாடசாலை அதிபர் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த திருட்டுச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றது.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார், அப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் மூவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சந்தேகத்திற்குரிய இம்மாணவர்கள் தற்போது தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .