2025 ஜூலை 23, புதன்கிழமை

கலகெதரவில் ப.நோ.கூ.சங்கக் கிளையை உடைத்து திருட்டு

Suganthini Ratnam   / 2012 மே 18 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சீ.எம்.ரிஃபாத்)

கண்டி, கலகெதர பொலிஸ் பிரிவிலுள்ள பலநோக்கு கூட்டுறவுச் சங்க கிளையொன்று நேற்று வியாழக்கிழமை  நள்ளிரவு இனந்தெரியாதோரினால் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக கலகெதர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூட்டுறவுச் சங்க கட்டடத்தின் பின்புறக் கதவை உடைத்துக்கொண்டு  உட்புகுந்த திருடர்கள்,  பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இத்திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .