2025 ஜூலை 23, புதன்கிழமை

புதையல் தோண்டிய மூவர் ஆனமடுவவில் கைது

Menaka Mookandi   / 2012 மே 18 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

ஆனமடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பலவத்தை எனும் பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகச் சொல்லப்படும் மூவரை நேற்றிரவு கைது செய்துள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்டப் பயன்படும் உபகரணங்களுடன் மேலும் சில பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொலனறுவை, ஆராச்சிக்கட்டு மற்றும் உப்பலவத்தை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று ஆனமடு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். ஆனமடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .