2025 ஜூலை 23, புதன்கிழமை

சாவகச்சேரியில் தங்கச் சங்கிலியை திருட முற்பட்ட யுவதிகள் கைது

Super User   / 2012 மே 18 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                               (எஸ்.கே. பிரசாத்)

சாவகச்சேரியில் உள்ள சிவன்கோயிலில்  வியாழமாற்ற  சிறப்பு பூசையில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த  வயோதிபப் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை அறுக்க முற்பட்ட இரு யுவதிகள் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் வியாழ மாற்ற சிறப்பு பூசைகள் சாவகச்சேரியில் உள்ள சிவன் கோயிலில் நடைபெற்றபோது பெருமளவான பக்கதர்கள் வழிபாடுகளின் கலந்து கொண்டனர். சனநெரிசலைப் பயன்படுத்தி நான்கு பெண்கள் வயோதிபப் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை அறுக்க முற்பட்டபோது எதிரில் நின்றவர்களால்; இவர்கள் மடக்கப்பிடிக்கப்பட்டனர்.

இதில் இரண்டு பெண்கள் தப்பி ஒடிவிட்டனர். ஏனைய இருவரும் சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். தப்பி ஒடிய இருவரையும் சாவகச்சேரி பொலிஸார் தெடிவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .