2025 ஜூலை 23, புதன்கிழமை

சட்டவிரோதமாக ஏற்றிச்செல்லப்பட்ட மரக்குற்றிகள், பலகைகள் கைப்பற்றப்பட்டன.

Kogilavani   / 2012 மே 19 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

சட்டவிரோதமாக ஏற்றி வரப்பட்ட சுமார் பத்து இலட்ச ரூபாய் பெறுமதியான முதிரை, தேக்கு மரக்குற்றிகளும் அரியப்பட்ட மரக் கட்டிகளும் அவற்றை ஏற்றிவரப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் நேற்று வெள்ளிக்கிழமை ஏறாவூர் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக ஏறாவூர் பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜீ.பி.எச்.எச். சனத்குமார பண்டார தெரிவித்தார்.

வந்தாறுமூலையில் சுமார் ஏழு இலட்சம் ரூபாய் பெறுமதியான தேக்கு மரங்களும் அவற்றை ஏற்றி வர பயன்படுத்தப்பட்ட ஒரு உழவு இயந்திரம், ஒரு ரிப்பர் வாகனம், இரண்டு மாட்டு வண்டிகள் என்பனவும் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஏறாவூர் பாரதிபுரம் பகுதியில் சுமார் மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான அரியப்பட்ட மரங்களும் அவற்றை ஏற்றிவரப் பயன்படுத்தப்பட்ட உழவு இயந்திரமும் கைப்பற்றப்பட்டபட்டுள்ளன.

இவ்விரு சம்பவங்களுடனும் தொடர்புடைய சந்தேக நபர்கள்   தப்பியோடிவிட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் மேற்கொண்டுள்ளதாக  அவர் மேலும் தெரிவித்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .