2025 ஜூலை 23, புதன்கிழமை

யாழில் வலுவிழந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது

Super User   / 2012 மே 19 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                   (கவிசுகி)

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியிலுள்ள பற்றை ஒன்றுக்குள் வைத்து வலுவிழந்த இளம் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தென்பகுதியைச் சேந்த இருவர் இன்று சனிக்கிழமை நண்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்

மேற்படி  இருவரும் பொதுமக்களினால் பிடிக்கப்பட்டு பனை மரத்தில் கட்டப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்

இவ்விருவரும் தற்போது ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.  பாதிக்கப்பட்ட  பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக வருகிறார்

இச் சம்பவம் தொடர்பாக ஊர்காவற்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .