2025 ஜூலை 23, புதன்கிழமை

புத்தளத்தில் சிறுத்தைத் தோலுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2012 மே 20 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.மும்தாஜ்,ஜூட் சமந்த,ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

புத்தளம் கொட்டுக்கச்சி எதுகொட பிரதேசத்தில் சிறுத்தைத் தோல் மற்றும் ஒன்றரை கிலோ இறைச்சியையும் புத்தளம் பொலிஸார் கைப்பற்றியதுடன், ஒருவரையும் நேற்று சனிக்கிழமை இரவு கைதுசெய்துள்ளனர்.

பொலிஸாருக்கு  கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து  குறித்த இடத்தை முற்றுகையிட்ட பொலிஸார் சிறுத்தைத் தோல்  மற்றும் இறைச்சியையும் கைப்பற்றியதுடன், ஒருவரையும் கைதுசெய்ததாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

தான் வளர்த்த சிறுத்தையையே அறுத்து இறைச்சி ஆக்கியதாக சந்தேக நபர் விசாரணையின்போது கூறியதாக பொலிஸார் கூறினர்.

கைதுசெய்யப்பட்ட இச்சந்தேக நபர் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .