2025 ஜூலை 23, புதன்கிழமை

ஐ.ம.சு.கூட்டமைப்பின் புளத்சிங்கள பிரதேசசபை உறுப்பினர் கடத்தல்

Suganthini Ratnam   / 2012 மே 21 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் புளத்சிங்கள பிரதேச சபை உறுப்பினரான லக்மினி அனுபமா  பண்டிதரட்ன (வயது 29) இனந்தெரியாத குழுவினரால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் வரக்காகொட தெபுவான பகுதியில் வாகனத்தில் வந்த இனந்தெரியாத குழுவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கடத்தப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

இவர் கடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லையென பொலிஸார் கூறினர். காணாமல் போன இவரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கையில் புளத்சிங்கள் மற்றும் தெபுவான பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். (புத்திக குமாரசிறி)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .