2025 ஜூலை 23, புதன்கிழமை

ஆயுததாரியின் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகாயம்

Menaka Mookandi   / 2012 மே 22 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒக்கம்பிட்டிய, கும்புக்கன பிரதேச வீடொன்றுக்குள் புகுந்துள்ள ஆயுததாரி ஒருவர் அவ்வீட்டிலுள்ளவர்கள் மீது நடத்திய தாக்குதலில் 13 வயது சிறுமியொருவர் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கும் 4 மணிக்கும் இடையிலான காலப்பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது காயமடைந்தவர்கள் மொனராகலை மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

சம்பவத்துடன் தொடர்புடையதான சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .