2025 ஜூலை 23, புதன்கிழமை

வாழைச்சேனையில் கஞ்சாவுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2012 மே 22 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள செம்மண்ணோடை எம்.பி.சி.எஸ். வீதியில் 6 கிலோ 997 கிராம் கஞ்சாவுடன் இருவர் நேற்று திங்கட்கிழமை இரவு வாழைச்சேனை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து குறித்த பிரதேசத்திற்குச் சென்ற பொலிஸார்,  விற்பனைக்கு தயாராகவிருந்த கஞ்சாவுடன் அவர்களின் மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியதுடன், இச்சந்தேக நபர்களையும் கைதுசெய்ததாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.பி.ஈ.ஜயவீர தெரிவித்தார்.

இதனுடன் ஏனைய நபர்களும் தொடர்புபட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .