2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மனைவியை கொலை செய்த கணவர் தற்கொலை

Menaka Mookandi   / 2012 மே 23 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

ஆனமடு பொலிஸ் பிரிவில் இன்று அதிகாலை தனது மனைவியைக் கொலை செய்த கணவர் ஒருவர் தானும் விசமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனமடு பெரமாகொத்து எனும் பிரதேசத்தில் உள்ள குளத்தின் அருகிலேயே இச்சம்வம் இடம்பெற்றுள்ளது.

47 வயதுடைய பெண்னே இவ்வாறு கணவரால் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.  அத்துடன், இக்கொலையைத் தொடர்ந்து  58 வயதுடைய கணவரும் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்தக் கொலைக்குரிய காரணம் என்னவென இதுவரை தெரியவில்லை எனத் தெரிவிக்கும் ஆனமடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .