2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கி மீட்பு

Kogilavani   / 2012 ஜூன் 17 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூக்கர்கல் பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கியொன்றினை நேற்று சனிக்கிழமை இரவு வாழைச்சேனை பொலிஸார் மீட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினைத் தொடர்ந்து மூக்கர்கல் குளத்துக்கு அருகில் ரீ-56 ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

யுத்தக்காலத்தில் விடுதலை புலிகளினால் இத் துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்திருக்கலாமென்று சந்தேகிப்பதாகவும் இதுத் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.பி.ஈ.ஜயவீர தெரிவித்தார்.


  Comments - 0

  • mohamed ismail Monday, 18 June 2012 08:31 PM

    இன்றுதான் உங்களது வெப்சைட்டைப் பார்க்க கிடைத்தது. மிகவும் சந்தோஷம் அத்துடன் மிகவும் நன்றி. சட்ட விரோதமான ஆயுதங்களை இவ்வாறு பிடித்தால் நாடு நலம் பெறும்! நன்றி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X