2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

துப்பாக்கிப் பிரயோகத்தில் இளம் ஜோடி படுகாயம்

Super User   / 2012 செப்டெம்பர் 24 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சில வாரங்களில் திருமணம் செய்யவிருந்த இளம் ஜோடியொன்று 52 வயதான நபர் ஒருவரினால் சுடப்பட்ட சம்பவம் பலாங்கொடை கொடகும்புற பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

மேற்படி பெண்ணின் வீட்டுக்கு அவரை திருமணம் செய்யவிருந்தவர் சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இருவரும் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.  அப்பெண்ணுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

25 வயதான மேற்படி ஆணும் 25 வயதான பெண்ணும் வீட்டின் முன்பகுதியிலிருந்து உரையாடிக்கொண்டிருந்தபோது மேற்படி நபர் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டதாக தெரிவிக்கப்படுகிறது.  மேற்படி சந்தே நபர் கிராமவாசிகளின் உதவியுடன் இன்று காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.  இவர் கொடகும்புற பிரதேசத்தைச் சேர்ந்தவாராவர்.

இத்துப்பாக்கிப் பிரயோகத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. எனினும் அவர் மேற்படி பெண்ணின் உறவினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .