2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பாலியல்வல்லுறவு, கொலைக் குற்றச்சாட்டில் கைதான இருவருக்கு மரணதண்டனை

Kogilavani   / 2012 செப்டெம்பர் 26 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                      (சி.எம்.ரிஃபாத்)
கண்டியில், கடந்த 12 வருடங்களுக்கு முன்பு யுவதி ஒருவரை கடத்திச்சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கைதான இருவருக்கு தலா 20 வருட சிறைத்தண்டனையும் மரணத்தண்டனையும் வழங்கி கண்டி மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2000 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி நாவலப்பிட்டியவில் மேலதிக வகுப்பு ஒன்றிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த 23 வயதுடைய யுவதியை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் 6 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களில் மூவர் வழக்கு விசாரணைகளை தொடர்ந்து விடுதலை செய்யப்பட்டதுடன் ஏனைய மூவருக்கும் எதிராக வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

மேற்படி மூவரில் ஒருவர் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த காலத்தில் இருதய நோயின் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மொஹமட் ஹாபிஸ் (60 வயது), மொஹமட் கமால்தீன் (வயது 80) ஆகிய இருவருக்கும் தலா 20 வருட சிறைத்தண்டனையும், கொலைக் குற்றச்சாட்டுக்காக மரணத்தண்டனையும் வழங்கி நீதவான் மணிலால் வைத்திய திலக்க தீரப்பளித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .