2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கத்திக் குத்துக்கு இலக்காகி வன பாதுகாப்பு திணைக்கள சாரதி பலி

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 29 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஜெனி)
 
மன்னார், தாழ்வுபாடு பிரதான வீதியில் உள்ள கீரி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வன பாதுகாப்பு திணைக்களத்தின் மன்னார் அலுவலகத்தில் சாரதியாக பணியாற்றும் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு கீரி பகுதியில் உள்ள அவர்களுடைய அலுவலகம் சார்ந்த பகுதியில் மது விருந்து இடம்பெற்ற நிலையில் நேற்றிரவு 9 மணியளவில் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அநுராதபுரம், திசாவாவி பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட நபரின் சடலம் மன்னார் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவருடன் சேர்ந்து மது அருந்தி ஒருவர் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .