2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வயோதிபரை கொலை செய்த குற்றச்சாட்டில் இளைஞர் கைது

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 08 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.எம்.எம். ரம்ஸீன்) 

கம்பளையில் 98 வயதான வயோதிபரொருவரை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் 22 வயதான இளைஞரொருவர் இன்று திங்கட்கிழமை காலை கம்பளைப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கம்பளை குடமாகை பகுதியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான எம்.நைனா முஹம்மத் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவராவர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது, 

நேற்று  ஞாயிற்றுக்கிழமை மாலை இவ்வயோதிபர் வீட்டில் தனியாக இருந்தபோது, சிகெரட் வாங்குவதற்கு பணம் தருமாறு கேட்டு இவ்வயோதிபரின் பேரனான சந்தேக நபர் தொந்தரவு செய்துள்ளார். இவ்வயோதிபர் பணம் கொடுக்க மறுத்தமையையடுத்து ஆத்திரமடைந்த சந்தேக நபர் கோடரியை எடுத்து பாட்டனாரின் கழுத்தை வெட்டியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் தற்போது கம்பளை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணையை  கம்பளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .