2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வாழைச்சேனையில், பல கொள்ளைச் சம்வங்களுடன் ஈடுபட்டு வந்த நபர் கைது

Kogilavani   / 2012 ஒக்டோபர் 12 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என கருதப்படும் நபர் ஒருவரை வாழைச்சேனை பொலிஸார் நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளதுடன் அந்நபரினால் கொள்ளையடிக்கப்பட்ட பல்வேறு பொருட்களையும் மீட்டுள்ளனர்.

வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலை வீதியில் உள்ள பலசரக்குக் கடை ஒன்றினை உடைத்து கொள்ளையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில் கடை உரிமையாளர் மற்றும் பொது மக்களால் மேற்படி நபர் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களாக ஓட்டமாவடி, வாழைச்சேனை, மிறாவோடை போன்ற பகுதிகளில் உள்ள கையடக்கத் தொலைபேசிக் கடைகள், பலசரக்குக் கடைகள் உட்பட இப் பகுதியில் உள்ள  வீடுகள் உடைக்கப்பட்டு கொள்ளைச் சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளன.

இக்கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் பொது மக்களால் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் மேற்படி நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நபரிடம் மேற்கொண்ட விசாரணையின் பின்னர், ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை போன்ற பகுதிகளில் அமைந்துள்ள விடுகளில் இருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் கொள்ளையர்கள் பாவித்து வந்த கூறிய ஆயுதங்கள், பூட்டுக்களை உடைக்கின்ற கருவிகள் என்பவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இக்கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் இன்னும் பலர் இருப்பதாகவும் அவர்கள் தொடர்பாக பிடிபட்டுள்ள சந்தேக நபரை விசாரித்து வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.பி.ஈ.ஏ.ஜயவீர தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .