2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

புத்தளத்திலுள்ள வீடொன்றில் தங்கநகைகளும் பணமும் கொள்ளை

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 14 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தில்லையடி அல்ஜித்தா நகர் கிராமத்திலுள்ள  வீடொன்றில்  தங்கநகைகளும் பணமும் கொள்ளையிடப்பட்டதாக புத்தளம் பொலிஸில் அவ்வீட்டு உரிமையாளர்  இன்று காலை முறைப்பாடு செய்துள்ளார்.

சுமார் 640,000 ரூபா பெறுமதியான தங்கநகைகளும் 200,000 ரூபா பணமும் கையடக்கத் தொலைபேசியொன்றும் கொள்ளையிடப்பட்டுள்ளதென அவ்வீட்டு உரிமையாளர் முறைப்பாடு செய்ததாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இக்கொள்ளை தொடர்பில் வீட்டு உரிமையாளர் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் வீட்டு வளவுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், வீட்டிலிருந்த முச்சக்கரவண்டியினதும் மோட்டார் சைக்கிளினதும் டயர்களை கழற்றியுள்ளனர். பின்னர்  கூரையினூடாக வீட்டினுள் நுழைந்த இக்கொள்ளையர்கள்,  வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மயக்க மருந்தை தெளித்துவிட்டு  அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த தங்கநகைகளையும் பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். அதிகாலை 6 மணியளவில் வீட்டின் உரிமையாளர் உறக்கத்திலிருந்து எழுந்தபோதே வீட்டில் கொள்ளை இடம்பெற்றமை தெரியவந்தது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கொள்ளை புத்தளம் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .