2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 21 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

கல்முனை, மருதமுனை பிரதேசத்தில் ஒரு கிலோ கஞ்சாவுடன், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படும் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து கல்முனை பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி சமந்த தலைமையிலான பொலிஸ் குழுவினர், மருதமுனை மக்காமடி வீதியிலுள்ள வீடொன்றை சோதனையிட்டனர்.  இதன்போது  மறைத்துவைக்கப்பட்ட கஞ்சா பொட்டலத்தை மோப்ப நாயின் உதவியுடன் கைப்பற்றியதாக கல்முனைப் பொலிஸார் கூறினர்.

கைதுசெய்யப்பட்டவர் ஒரு கஞ்சா வியாபாரியெனவும் இவர் நீண்டநாளாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்ததாகவும் கைப்பற்றப்பட்ட கஞ்சா விற்பனைக்காக மறைத்துவைக்கப்பட்டதெனவும்  ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை கல்முனைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .