2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் கைதான ஐவருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2012 ஒக்டோபர் 25 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                     (சி.எம்.ரிஃபாத்)
மாத்தறை, இறத்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்று வந்த கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதிமன்ற நீதவான் நேற்று உத்தரவிட்டார்.

இறத்தோட்டை பிரதேசத்தில் நீண்டகாலமாக இடம்பெற்று வந்த வீடுடைப்பு, கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் ஐந்து சந்தேகநபர்களை நேற்று புதன்கிழமை கைது செய்தனர்.

மேற்படி சந்தேகநபர்களிடமிருந்து பல தங்க நகைகள், 45 ரூபாய் ரொக்கப்பணம், தங்க நகைகள் அடகு வைக்கப்பட்டதற்கான 17 பற்றுச்சீட்டுகள்
என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.

இந்நிலையில், 23 குற்றச்சாட்டுக்களுடன் இச் சந்தேக நபர்களை பொலிஸார் மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது, நீதவான் இவர்களை எதிர்வரும் 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .