2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஆண் மாணவர்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 27 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சுவர்ணஸ்ரீ)
 
பண்டாரவளை - பூநாகலை பகுதி தமிழ் பாடசாலை ஒன்றின் சிறுவர்கள் சிலரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியர் நேற்று 26ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
பூநாகலை பகுதி பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 6-8ஆம் வகுப்பு ஆண் மாணவர்கள் சிலரை குறித்த ஆசிரியர் 2011ஆம் ஆண்டு இறுதியில் இருந்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்துள்ளாரென முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
 
இதனையடுத்து குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு இன்று 27ஆம் திகதி பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் பின்னர் அவரை எதிர்வரும் 31ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .