2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

குழல் துப்பாக்கியைத் திருடிய சந்தேகத்தில் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 28 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சீ.எம்.ரிஃபாத்)

ரங்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொடமுன்ன கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து குழல்ரக துப்பாக்கியொன்றை திருடிய குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை பொலிஸார் சந்கேத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.

தொலைக்காட்சி பார்ப்பதற்காகச் சென்றவரே இவ்வாறு துப்பாக்கியைத் திருடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தொலைக்காட்சி பார்ப்பதற்காகச் அயல் வீட்டிற்குச்; சென்ற குறித்த சந்தேக நபர் அவ்வீட்டிலிருந்த துப்பாக்கியை திருடிச்சென்றுள்ளதாக ரங்கல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து, பொலிஸார் விசாரணையில் குறித்த சந்தேக நபரை நேற்று சனிக்கிழமை கைதுசெய்தனர்.

தொலைக்காட்சி பார்ப்பதற்காகச் சென்ற அவர், அங்கு மதுபானம் அருந்திவிட்டு இரவு அவ்வீட்டிலேயே தங்கியுள்ளார். மறுநாள் அதிகாலை இவர் வீட்டில் இல்லாததைத் தொடர்ந்து  வீட்டிலிருந்தவர்கள் தேட ஆரம்பித்தபோது, அவ்வீட்டிலிருந்த குழல் துப்பாக்கி காணாமல்போனதைக் அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து அவ்வீட்டு; உரிமையாளர் இது தொடர்பில் ரங்கல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டபோதிலும், காணாமல்போனதாகக் கூறப்படும் அத்துப்பாக்கி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .