2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற கடற்படை வீரர் கைது

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 28 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


(மொஹொமட் ஆஸிக்)


ஐந்து கிலோ கஞ்சா கடத்திய குற்றச்சாட்டின் பேரில் ஓய்வுபெற்ற கடற்படை வீரர் ஒருவரை அலவத்துகொடை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

தனது மனைவி மற்றும் மகனுடன் சொகுசு கார் ஒன்றில் ஐந்து கிலோகிராம்  கஞ்சாவுடன் பயணம் செய்துகொண்டிருந்தபோதே நேற்று சனிக்கிழமை இரவு 9.45 மணியளவில் அக்குறணை ஏழாம் கட்டையில்  பொலிஸார் அவரை கைதுசெய்துள்ளனர்.

மொனராகல, புத்தல பிரதேசத்திலிருந்து மாத்தளை பகுதிக்கு கொண்டு செல்லும்போதே கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். காரின் பின்புறத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 4.902 கிலோகிராம் (ஐந்து கிலோவை அண்மித்த) கஞ்சாவையே  பொலிஸார் கைப்பற்றிவுள்ளனர்.

அத்துடன், காரில் பயணித்த அவரது மனைவி, 18 வயதான மகன், மற்றும் இருவர் உட்பட 5 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மாத்தளை வரகந்த பிரதேசத்தில் வசிக்கும்  இவர்களை கண்டி நீதிமன்ற நீதவான் முன் ஆஜர் செய்யவுள்ளதாக தெரிவித்த பொலிஸார், ஓய்வூதிய சான்றிதழை பயன்படுத்தி இதற்கு முன்னரும் இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் கூறினர்.

கஞ்சா கைப்பற்றப்பட்டது தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவத்துகொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஷாந்த ஹெட்டியாரச்சி தலைமையிலான பொலிஸ் குழு மேற்கொண்டு வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .