2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத கருக்கலைப்பு நிலையம் சுற்றிவளைப்பு

Kanagaraj   / 2012 ஒக்டோபர் 28 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமாக மிகவும் இரகசியமான முறையில் நடத்தப்பட்ட கருக்கலைப்பு நிலையத்தை சுற்றிவளைத்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளனர்.

கேகாலை - அலதலாவல பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த கருக்கலைப்பு நிலையத்தையே நேற்று சுற்றிவளைத்த பொலிஸார் அந்த நிலையத்திலிருந்து கருக்கலைப்பிற்கு பயன்படுத்தப்படும் வைத்திய உபகரணங்கள் சிலவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் வைத்தியர் எனக் கூறி குறித்த கருக்கலைப்பு நிலையத்தை நடாத்திச் சென்றுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவரும் அலதலாவல பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .