2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கால்களை இழந்த கண்டி திருடன்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 01 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

திருடுவதற்காக மாடி வீட்டுத் தொகுதியொன்றுக்குச் சென்ற திருடன் ஒருவன், உரிமையாளரிடமிருந்து தப்பிக்கொள்வதற்காக மாடியிலிருந்து குதித்ததில் தனது இரண்டு கால்களையும் உடைத்துக்கொண்ட சம்பவமொன்று கண்டி, மஹியாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் போது திருடனைப் பிடிப்பதற்கு முற்பட்ட வீட்டு உரிமையாளரும் மாடியிலிருந்து கீழே குதித்ததில் அவருடைய காலொன்றும் உடைந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மூன்று மாடிகளைக் கொண்ட மேற்படி வீட்டில் மூன்று குடும்பங்கள் வசித்து வந்துள்ளன. இவ்வீடுகளுக்கு சென்ற திருடன் மூன்றாவது மாடியிலுள்ள வீட்டில் திருடும் போது அதன் உரிமையாளர் கண்டுள்ளார்.

அவரிடம் இருந்து தப்புவதற்காக திருடன் மூன்றாம் மாடியில் இருந்து குதித்துள்ளார். இதன்போதே திருடனது இரண்டு கால்களும் உடைந்துள்ளன.

அவரை பிடிப்பதற்காக முதலாம் மாடியில் இருந்து கீழே குதித்த வீட்டின் உரிமையாளரதும் காலொன்று உடைந்துள்ளது. தற்போது இவ்விருவரும் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .