2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் பெண்ணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 04 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி,ஜிப்ரான்)


மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடிப் பகுதியில் பெண்ணொருவரின் சடலம்  இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

ஆயித்தியமலை, நரிப்புல் தோட்டக் கிராமத்தைச் சேர்ந்த ரதிகா (வயது 20) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டது.

கல்லடி, சரவண வீதியிலுள்ள அரசாங்க உத்தியோகஸ்தர்கள் தங்கும் விடுதியின் பின்புறத்திலிருந்து  இச்சடலம் மீட்கப்பட்டதாகத் தெரிவித்த காத்தான்குடி பொலிஸார், மட்டக்களப்பில் கடமையாற்றும் அரசாங்க அதிகாரியொருவரின் குடும்பம் தங்கியிருந்த விடுதியில் இவர் வீட்டு வேலை பார்த்துவந்ததாகவும் கூறினர். 

இது தொடர்பான விசாரணையை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். படங்கள்:- ஜிப்ரான்




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .