2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ரோமானியர் இருவருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2012 நவம்பர் 04 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரோமானிய பிரஜைகள் இருவரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரையும் தெஹிவளை பொலிஸார் கல்கிசை மேலதிக நீதவான் ரூவிர வெலிவத்த முன்னிலையில் இன்று ஆஜர் படுத்திய போதே மேலதிக நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

போலி கடனட்டைகளை பயன்படுத்தி தெஹிவளைஇ கல்கிஸைஇ பம்பலப்பிட்டி போன்ற பகுதிகளிலுள்ள வங்கிகளின் தன்னியங்க பணம் பெறும் இயந்திரத்தில் பணங்களை பெற்றுக்கொண்ட ரோமானிய பிரஜைகள் இருவரை தெஹிவளை பொலிஸார் நேற்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 235இ100 ரூபாவும் 58 போலி கடனட்டைகளையும் பொலிஸார் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .