2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஹட்டனில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 06 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆர்.கமலி)


ஹட்டன் பகுதியில் ஒருதொகை போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இருவர் ஹட்டன் வலய குற்றவொழிப்புப் பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.                                                        

இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது வர்த்தக நிலையமொன்றில் மறைத்துவைக்கப்பட்ட நிலையிலேயே இவை கைப்பற்றப்பட்டன.  கஞ்சாவுடன் 4.5 கிலோகிராம் புகையிலைத்தூள், என்சி டப்பாக்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக ஹட்டன் வலய குற்றவொழிப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

நோர்வூட் மற்றும் பூண்டுலோயா பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் ஹட்டன் வலய குற்றவொழிப்புப் பிரிவினர் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .