2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பணக் கொடுக்கல், வாங்கல் கைகலப்பில்; இளைஞர் மீது கத்திக்குத்து

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 07 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்,எஸ்.எம்.எம்.றம்ஸான், அப்துல் அஸீஸ்)

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் பணக் கொடுக்கல், வாங்கல் காரணமாக இருவருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதால் ஒருவர் கத்திக்குத்துக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

முகமட் சிறான் (வயது 24) என்பவரே கத்திக்குத்துக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்;.

கத்திக்குத்தை மேற்கொண்டதாகக் கூறப்படும் நபர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது இவ்வாறிருக்க, இன்று புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் கத்தியால் குத்தியவரின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து தீயை அணைத்தனர். இருப்பினும் இவ்வீடும்  வீட்டில் நிறுத்திவைக்கப்பட்ட காரொன்றும் முற்றாக எரிவடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர். 

கத்தியால் குத்தியவரின் வீட்டிலுள்ளவர்கள் அச்சம் காரணமாக வீட்டைப் பூட்டிவிட்டு உறவினரின் வீட்டில் உறங்கச்சென்றிருந்த வேளையிலேயே இத்தீ விபத்து இடம்பெற்றதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

சாய்ந்தமருது முதலாம் பிரிவு சாகிரா கல்லூரி வீதியிலுள்ள இரு அயல் வீடுகளைச் சேர்ந்த இருவருக்கிடையில்   நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 400 ரூபா பணக் கொடுக்கல்,  வாங்கலில் பிரச்சினை ஏற்பட்டது. இதன்போது வாய்த்தர்க்கம் முற்றி கைகலப்பாக மாறியதால் ஒருவர் தலையில் மற்றையவர்  கத்தியால் குத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

கத்திக்குத்துக்குள்ளானவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கல்முனைப் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். படங்கள்:- எஸ்.எம்.எம்.றம்ஸான்




  Comments - 0

  • Avathanee Wednesday, 07 November 2012 08:12 AM

    மக்களுக்கு இது ஒரு நல்ல பாடம். 400 ரூபாவுக்காக சண்டை பிடித்து அதை விட அதிகமாக செலவு செய்கிறார்கள். இதில் எல்லோருக்கும் படிப்பினை உண்டு.

    Reply : 0       0

    fana Wednesday, 07 November 2012 05:19 PM

    ஒரு உயிரின் பெருமதி வெறும் 400/- தானா?
    ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது எவவளவு நிஜமானது!!!
    ஸுப்ஹானல்லாஹ்!!

    Reply : 0       0

    hizam Friday, 16 November 2012 10:12 AM

    ஒரு உயிரின் பெருமதி வெறும் 400/- தானா?
    ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது எவவளவு நிஜமானது!!!
    ஸுப்ஹானல்லாஹ்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .