2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

போத்தலினால் குத்தப்பட்டு ஒருவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 23 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (எம்.சுக்ரி,ஜிப்ரான்)

மட்டக்களப்பு நகரில் போத்தலினால் குத்தப்பட்டு நேற்று வியாழக்கிழமை இரவு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு கோட்டமுனை பகுதியிலுள்ள ஆதம்லெவ்வை முகம்மது முஸ்தபா (வயது 46) என்பவரே இவ்வாறு  போத்தல் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு நகரிலுள்ள ஹோட்டலொன்றின் முன்பாக நேற்று வியாழக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றதாக  மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

போத்தல் குத்துக்கு இலக்கான நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, அங்கு உயிரிழந்ததாகவும் பொலிஸார் கூறினர்

இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .