2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 23 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி, ரி.லோஹித்,ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை காலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

பாலமுனை 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கனிபா நியாஸ் (வயது 41) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இவர் சடலமாகக் கிடப்பதைக் கண்ட அயல் வீட்டுக்காரர்,  இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து இச்சடலம் மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பைச் சேர்ந்த இவர் பாலமுனை பிரதேசத்திலுள்ள பெண்ணொருவரை திருமணம் செய்து 10 வருடங்களுக்கும்  மேலாக அங்கு வசித்துவருவதாகவும் இவரது மனைவி வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்புக்காக சென்று 10 மாதங்கள் கடந்துள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணையை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .