2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கருவைக் கலைக்க முயன்ற சிற்றூழியர் கைது

Kogilavani   / 2012 நவம்பர் 28 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                            (எம்.சீ.சபூர்தீன்)
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் எனக் கூறி யுவதியொருவரின் கருவைக் கலைக்க முயன்ற நபரொருவரை அநுராதபுரம் தலைமையக குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் ஊழியராகக் கடமையாற்றிய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றத் தடுப்புப் பிரிவுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருதாவது,

அநுராதபுரம் பாலாட்டிக்குளம் பகுதியை சேர்ந்த யுவதி ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் கருவைக் கலைக்க மேற்படி நபரிடம் சிகிச்சை பெற்றுள்ள போதிலும் சிகிச்சை பலனளிக்காமையினால் மீளவும் வந்துள்ளார்.

இவரிடமிருந்து சந்தேக நபர் ரூபா 12000ஐப் பெற்றுகொணடதுன்  பாழடைந்த வீடொன்றுக்கு குறித்த யுவதியை அழைத்துச் சென்று கருவைக் கலைக்க முற்பட்ட வேளை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது இந்நபரிடமிருந்து சில பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நபர் ஓய்வூதியம் பெறும் காலத்தை அண்மித்திருந்தமை விசாரணை மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .