2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 02 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

இந்த சந்தேக நபர்கள் மூவரும் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  இவர்களிடமிருந்து பெறுமதி வாய்ந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.பி.ஈ.ஏ.ஜயவீர தெரிவித்தார்.

கடந்த சில  மாதங்களாக வாழைச்சேனை, ஓட்டமாவடி, மீராவோடை ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகளில் இடம்பெற்ற கொள்ளைச்; சம்பவங்கள் தொடர்பில் பொலிஸில் பொதுமக்கள் முறைப்பாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவந்த பொலிஸார், இந்த சந்தேக நபர்கள் மூரையும் கைதுசெய்ததாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பான  விசாரணையை வாழைச்சேனை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .