2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

துறைமுகத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 02 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் உருக்குலைந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் தெற்கு ஆசிய இறங்குதுறை நுழைவாயிலிலேயே  இந்த சடலம் துறைமுகப் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

 கிராண்ட்பாஸில் காணாமல் போனதாகக் கூறப்படும் பெண்ணினது சடலமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது. இந்த நிலையில், இந்த சடலத்தை அடையாளம் காட்டுமாறு காணாமல் போனதாகக் கூறப்படும் பெண்ணின் உறவினர்களிடம்  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். (சனத் டெஸ்மன்ட்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .