2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பாண் வியாபாரியிடம் பறிமுதல்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 03 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

பாண் வியாபாரி ஒருவரை வழிமறித்து அவரை ஆயுதமுனையில் அச்சுறுத்தி அவரிடமிருந்து பணமும் கையடக்கத்தொலைபேசியும் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று அம்பாறையில் இடம்பெற்றுள்ளது. 

நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முச்சக்கரவண்டியில் பாண் வியாபாரத்தில் ஈடுபட்டுவருகின்ற இந்த நபரை ஆயுதமுனையில் வழிமறித்த இருவர், அவரிடமிருந்த பணத்தையும்  கையடக்கத்தொலைபேசியையும் பறிமுதல் செய்துள்ளனர்.

பனங்காடு, கண்ணகிபுரம் பிரதேசங்களில் இந்த நபர்  முச்சக்கரவண்டியில் பாண் வியாபாரம் செய்துவிட்டு திரும்புகையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது.  இதன்போது  8,500 ரூபா பணமும் ஒரு கையடக்கத்  தொலைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று பாண் வியாபாரி  முறைப்பாடு செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்

கறுப்பு நிற ரீசேர்ட் அணிந்திருந்த இந்தக் கொள்ளையர்கள்  மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் அனிந்தவாறு ரி - 56 ரக துப்பாக்கி, பிஸ்டல் ரக துப்பாக்கிகளுடன் இருந்ததாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினார்.

இது தொடர்பான விசாரணையை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .