2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஏறாவூரில் ஆணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 04 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)

மட்டக்களப்பில் ஆணொருவரின் சடலத்தை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை இரவு மீட்டுள்ளனர்.

தளவாய்க் கிராமத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான முத்துலிங்கம் மகேஸ்வரன் (வயது 31) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தளவாய் கிராமத்திலுள்ள  வீடொன்றிலிருந்தே மேற்படி சடலம் மீட்கப்பட்டதாகவும் உறவினர்களும் அயலவர்களும் மேற்படி சடலத்தை அடையாளம் காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இது தொடர்பில் தளவாய் பொலிஸ் சாவடி பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

ஏறாவூர் பொலிஸ்  நிலையத்தின் பொலிஸ் கான்ஸ்டபிள்களான என்.விக்னராஜா, எம்.எம்.இப்றாஹிம், தளவாய் பொலிஸ் சாவடியின் பொலிஸ் அதிகாரி பதுறுதீன் ஆகியோரடங்கிய குழுவினர் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் சகிதம் சென்று மேற்படி சடலத்தை மீட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணையை  ஏறாவூர் மற்றும் தளவாய் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .