2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை திருடிய இருவர் கைது

Kogilavani   / 2012 டிசெம்பர் 07 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)
மிஹிந்தலை நகரத்திலுள்ள நகைக்கடையொன்றை உடைத்து சுமார் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை திருடிய இரண்டு இளைஞர்களை மிஹிந்தலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் 5ஆம் மேலும் திகதி அதிகாலையில் நகைக் கடையினை உடைத்து தங்க ஆபரணங்களைத் திருடிச் சென்றுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

வியாபார நிலையத்தின் உரிமையாளர் மிஹிந்தலை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்தே மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருநாகல் மற்றும் எஹலியகொட பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டள்ளதாகவும் இவர்கள் இருவரும் நகைக்கடை உரிமையாளரின் உறவினர்களென்றும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார்  மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .