2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கஹவத்தை கொலைச் சந்தேகநபர் கத்திக்குத்தில் பலி

Kogilavani   / 2012 டிசெம்பர் 08 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓபாத்த பகுதியில் 33 வயதுடைய நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி நபர், கஹவத்தை, கொடகத்தென பகுதியில் அண்மையில் களியாட்ட நிகழ்வொன்றின் போது கொலை செய்யப்பட்ட நபரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் ஒருவாராக இருக்கலாமென நம்பப்படுகின்றது.

குறித்த நபரின் உடலில் கடுமையான கத்திக் குத்து காயங்கள் காணப்பட்டுள்ளன. இந்நபர் உயிரிழப்பதற்கு முன் தனது குற்றங்கள் தொடர்பில் வாக்குமூலம் அளித்திருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .