2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

யாழில் ஆணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 09 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)


யாழ்ப்பாணத்தில் ஆண் ஒருவரின் சடலத்தை யாழ். பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்டுள்ளனர்.

யாழ். திருநகர் பகுதியைச் சேர்ந்த டேவிட் அந்தோனி (வயது 40) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு முன்பாக உள்ள பாலத்தில் இருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம் காணப்படுவதைக் கண்ட சிலர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். 
 
சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

மதுபோதையில் காணப்பட்ட இவர், பாலத்தில் வீழ்ந்த நிலையில் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளதாக  யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.மொஹமட் ஜெப்ரி கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .