2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கண்டியில் சுப்பர் மார்க்கட்டில் கொள்ளை

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 09 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.எம்.ரிஃபாத்)

கண்டியில் உள்ள சுப்பர் மார்க்கட் ஒன்றினுள் நுழைந்த இருவர், அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கண்டி, வில்லியம் கொபல்லாவ மாவத்தையில் உள்ள சுப்பர் மார்க்கட்டிலேயே நேற்று சனிக்கிழமை இரவு 8 மணியளவில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.

தலைக்கவசம் அணிந்தவாறு மோட்டார் சைக்கிளில் வந்த இவர்கள் இருவரும் இந்த சுப்பர் மார்க்கட்டினுள் புகுந்து அங்கிருந்தவர்களை கைத்துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். இவர்கள் சுமார் 238,890 ரூபா பணத்தைச் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .