2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

நகைக்கடையில் திருட்டு முயற்சி; சந்தேக நபர் மரணம்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 12 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சீ.எம்.ரிஃபாத்,  மொஹொமட் ஆஸிக்)

கண்டி நகர மத்தியிலுள்ள தொல்பொருள் நகைக்கடையொன்றில் திருட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது அக்கடையில் தீ விபத்து ஏற்பட்டதுடன், திருட்டு முயற்சியை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவரும் மரணமடைந்துள்ளார்.

கண்டி, ஹிந்தகல பகுதியைச் சேர்ந்த பெரியண்ணன் நகுலேஸ்வரன் (வயது 25) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

இந்நகைக்கடை தீ விபத்தால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், கடையிலிருந்த  பல இலட்சக்கணக்கான பொருட்கள் எரிவடைந்துள்ளதாகவும் கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இக்கடையில் திருடுவதற்கு வந்ததாகக் கூறப்படும் ஒருவர், சிறிய ரக காஸ் சிலிண்டரைக் கொண்டு கடையின் இரும்புக் கதவை வெட்டியகற்ற முற்பட்டபோது, காஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறி தீ பற்றியது.  இதன்போது இக்கடை முற்றாக எரிவடைந்ததுடன், சந்தேக நபரும் தீ விபத்தில் கடும் காயங்களுக்குள்ளான நிலையில் மரணமடைந்துள்ளார்.

சந்தேக நபர் தப்பிச்செல்ல முற்பட்டபோதிலும், அருகிலுள்ள காசல் ஒழுங்கையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார்  கூறினர்.

இச்சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.  (படங்கள்: ஆஸிக்)




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .