2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

அரச சார்பற்ற நிறுவனத்தின் அலுவலகம் உடைக்கப்பட்டு பொருட்கள் திருட்டு

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 15 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)


ஏறாவூரில் இயங்கி வரும் சமூக அபிவிருத்தி மன்றம் என்கின்ற அரச சார்பற்ற நிறுவனத்தை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள் அங்கிருந்த கணினியையும் அதன் உதிரிப்பாகங்களையும் திருடியுள்ளனர்.

பின்னர் திருடிய பொருட்களை இடைவழியில் விட்டு தலைமறைவாகிச் சென்றுள்ளனர் என்று அந்த நிறுவனத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் எம்.ரீ.பெனாஸிர் பானு தெரிவித்தார்.

ஏறாவூர் கலைமகள் வித்தியாலய வீதியிலுள்ள மேற்படி நிறுவன அலுவலகத்தில் இந்தத் திருட்டுச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் திருட்டுச் சம்பவம் தொடர்பாக செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் கைரேகை நிபுணர்களை அழைத்து வந்து திருடப்பட்டு கைவிட்டுச் சென்ற பொருட்களிலிருந்த கைவிரல் அடையாளங்களையும் அலுவலகத்திலுள்ள ஏனைய தடயங்களில் காணப்பட்ட அடையாளங்களையும் பதிவு செய்துள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

இதற்கு முதலும் சில காலங்களுக்கு முன்னர் பொதுமக்களுக்கு வழங்குவதற்கென இந்த நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த ஆறு தையல் இயந்திரங்கள் திருட்டுப் போய் அது கண்டு பிடிக்கப்படாத  நிலையிலேயே இந்தத் திருட்டுச் சம்பவமும் இடம்பெற்றுள்ளது என்று நிறுவனப் பணியாளர் எம்.ரீ.பெனாஸிர் பானு மேலும் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .